பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு

Erode news- பவானிசாகர் அணை.

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்ந்தது.

Erode news, Erode news today- பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்ந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.

கடந்த 21ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி 45.69 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று (மே.25) காலை 8 மணி நிலவரப்படி 52.53 அடியாக உயர்ந்தது. இதனால், கடந்த 4 நாளில் அணையின் நீர்மட்டம் 7 அடி (6.84 அடி) உயர்ந்துள்ளது. இதனிடையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.

நேற்று (மே.24) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,738 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.25) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,429 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 5.06 டிஎம்சியாக உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story