தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..? தெரிஞ்சுக்கங்க..!

தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..? தெரிஞ்சுக்கங்க..!

கோப்பு படம் 

நாம் எப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு கீழே நாம் பார்க்கும் ஒவ்வொரு சம்பவமும் எடுத்துக்காட்டாக இருக்கும்.

Role Model Celebrities,Mahendra Singh Dhoni,Suresh Raina, Jasprit Bumrah, Anushka Sharma, Bhuvneshwar Kumar

ஒரு மனிதன் ஏழ்மையில் வாடும்போது அல்லது துன்புறும்போது உதவி செய்தவராக இருக்கலாம் அல்லது செய்யமுடியாதவராக கூட இருக்கலாம். ஆனால் அந்த மனிதன் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தபின் அவன் வாழ்ந்த சூழலில் கண்ட மனிதர்களை மறப்பது மனிதாபிமானம் அற்ற செயலாகும். அவர்களுக்கு உதவி செய்யவேண்டாம். குறைந்தபட்சம் அவர்களை தெரிந்தவர்களாகவாவது காட்டிக்கொள்ளலாம். அதற்காக உறவுகளைக் கூட மறந்துவிடுவார்களா என்ன..?

Role Model Celebrities

நமது இளைஞர்கள் முன்மாதிரிகளாக நினைத்து அவர்களின் வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறார்கள். தனது குடும்பம் மற்றும் உறவினர்களை மறந்தவர்கள் எதிர்கால சமுதாயத்துக்கு எப்படி முன்னுதாரணமாணவர்களாக இருக்கமுடியும்?

இளைஞர்களே, இதைப்படித்துவிட்டு சிந்தித்துப்பாருங்கள்.


அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா தனது பாட்டி, மாமா மற்றும் அத்தையை கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை. எப்படி சொந்தங்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று பாருங்கள். பேத்தியும் மருமகளுமான அனுஷ்காவின் கல்யாணம் குறித்த தகவலை டி.வி.யில் இருந்து தெரிந்து கொண்டார்கள், பாட்டி, மாமா மற்றும் அத்தை. ஒருவேளை அனுஷ்காவுக்கு மிகச் சாதாரண குடும்ப உறுப்பினர்களை அழைப்பதில் வெட்கப்பட்டிருக்கலாம். பாவம் அதனால்தான் அவர் 20 விருந்தினர்களை மட்டுமே அழைத்திருந்தாராம். அதுகூட உயர்தட்டு மக்களாகத்தான் இருப்பார்கள். பாட்டி மாமா,அத்தை என்று அவர்களை சொல்வதற்கு அனுஷ்காவுக்கு வெட்கமாக இருந்திருக்கும்.

Role Model Celebrities


சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா 2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் சிறுவயதில் மடி மீது ஏறி விளையாடிய மாமாவை திருமணத்திற்கு அழைக்கவில்லை. ஊடகவியலாளர்கள் மாமாவிடம் பேசியபோது, ​​அவர் கண்ணீருடன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். நானெல்லாம் சாதரண மனுஷங்க. ரெய்னா பெரிய ஆளா ஆகிட்டாரு. எங்களை எப்படி கல்யாணத்துக்கு அழைப்பாரு. கல்யாணமே அசிங்கமாயிடுமே..? என்று கண்ணீர் சிந்தினார்.காரணம், சுரேஷ் ரெய்னா பெரிய ஆளான பிறகு தன் மாமாவை நினைத்து வெட்கப்பட்டார்.பொதுவெளியில் அவரை மாமா என்று சொல்லிக்கொண்டால் தன் கௌரவத்துக்கு இழுக்கு நேரும் என்று நினைத்து இருக்கலாம்.

Role Model Celebrities


ஜஸ்பிரீத் பும்ரா

17 ஆண்டுகளாக தனது பேரனைப் பார்க்க ஏங்கிக்கொண்டிருந்த ஜஸ்பிரீத் பும்ராவின் 84 வயதான தாத்தா, ஜஸ்ப்ரீத்தை சந்திக்க அகமதாபாத்திற்கு வந்தார். அங்கு ஜஸ்பிரீத்தின் தாய் அவரை வரவிடாமல் விரட்டினார். அதன் பிறகு ஜஸ்பிரீத் பும்ராவின் தாத்தா சபர்மதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.பாருங்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்கிறார்கள்.

நினைத்துப்பாருங்கள் இவர்களை கொண்டாடுகிறோமா இல்லையா..?


தல தோனி

தல, தல தோனி என்று கொண்டாடப்படும் குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களின் மிகப்பெரிய ஹீரோவாக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. ஆனால் இந்த தோனிதான், தனது சுயசரிதையில் எடுக்கப்பட்ட படத்தில் தனது சகோதரரைக் காட்டமலேயே படம் எடுக்கச் செய்தார்.

அப்படிப்பட்டவர்கள்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரிகளாக விளங்குகின்றனர். இளம் தலைமுறையினர் இவர்களை பின்பற்றி அவர்களின் வெறித்தனமான ரசிகராக உள்ளனர்.

Role Model Celebrities


புவனேஸ்வர் குமார்

இதில் ஒருவர் மட்டும் வித்தியாசமானவர். அவர் வேறு யாருமல்ல புவனேஸ்வர் குமார். இவர் தனது திருமணத்திற்கு கிராமம் முழுவதையும் அழைத்து விருந்து வைத்தார். அவரது திருமணத்தைக் கொண்டாடும் வகையில் தனது மாவட்டத்தில் இயங்கி வரும் கன்யா குருகுலத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் நன்கொடை அளித்து தனது நன்றி மற்றும் விசுவாசத்தைக் காட்டினார். புவனேஸ்வர் குமார், தி கிரேட் குமார். இவைகள்தான் மதிப்புமிக்கவைகள்.

எம் யோகநாதன் அன்றைய துணை ஜனாதிபதி முகமது ஹமீது அன்சாரியிடமிருந்து 'சூழல் போராளி' விருதை 2008ம் ஆண்டில் பெற்றபோது.

மரம் யோகநாதன்

ஒருவர் இந்த சமூகத்தில் எப்படி நடந்துகொள்கிறாரோ அதன்படியே அவரது பண்பும் தீர்மானிக்கப்படுகிறது. பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் ஆகிவிட முடியுமா அல்லது உயர்ந்தவர்கள் ஆகிவிடுவார்களா? இந்த சமூகத்தில் பெரிய பொருளாதார வசதி இல்லாமல் தமிழகத்தில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வரும் கோவை யோகநாதன் போன்றவர்கள்தான் இந்த சமூகத்தில் மதிப்புமிக்கவர்கள். அவர்கள்தான் உயர்ந்தவர்கள். இந்த சமூகத்தை, இந்த பூமியின் எதிர்காலத்தை தாங்கிப்பிடிக்க நினைக்கும் இவர்கள்தானே உண்மையான ஹீரோக்கள்.

தான் எப்படி வாழ்ந்தோம் என்ற வறுமை நிலையை மறந்து பணம் சம்பாதித்ததும் தனது அந்தஸ்த்தை உயர்த்திக்கொண்டவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆகிவிடமுடியுமா..?

இளைஞர்களே! இதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, கிராம மக்களைக் கூட தங்கள் குடும்பமாக கருதாத மலிவான பிரபலங்களிடமிருந்து அல்ல.

Tags

Read MoreRead Less
Next Story