சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர் கைது..!

சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர் கைது..!

யானையை வேட்டையாடி தந்தங்களை திருடிச் சென்ற கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பொம்மன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து, தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் யானையின் உடலில் இருந்து தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் யானையின் உடலில் இருந்து தந்தம் திருடப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி தாளவாடி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் காட்டு யானையின் உடலை கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டனர்.

அதனைத் தொடர்ந்து, யானையை வேட்டையாடி தந்தங்களை வெட்டி திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க வனத்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கும்டாபுரம் வனப்பகுதி தமிழ்நாடு - கர்நாடகா எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அதனால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது யானையை கொன்று தந்தங்களை வெட்டி எடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் மர்ம நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், யானையை வேட்டையாடி தந்தத்தை வெட்டிச் சென்ற கர்நாடக மாநிலம் எத்தேகவுடன் தொட்டியைச் சேர்ந்த பொம்மன் என்பவரை தாளவாடி வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த யானைத் தந்தங்களை கைப்பற்றி அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story