நாப்கின்களை கொண்டு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி உலக சாதனை

நாப்கின்களை கொண்டு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி உலக சாதனை

ஈரோட்டில் நாப்கின்களை பயன்படுத்தி மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படம் உருவாக்கப்பட்டது.

ஈரோட்டில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, நாப்கின்களை பயன்படுத்தி மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டது.

ஈரோட்டில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, நாப்கின்களை பயன்படுத்தி மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டது.

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு, பெமி-9 நடத்தும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படம் அமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.


இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகாலட்சுமி, ஈரோடு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் ஹேமலதா, வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மணியன் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் குமரன் மற்றும் உள்பட பலர் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோட்டை சார்ந்த 100 தந்தையர்கள், 1000 சதுர அடியில், 3000 மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் வைத்து விழிப்புணர்வு உருவப்படத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு இடம் பிடித்ததை நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர்கள் முனைவர் சிட்டுகலா, ஜென்சிங் ஜோ மற்றும் வினோதினி ஆகியோர் மேற்பார்வையிட்டு உறுதிப்படுத்தினர்.

இந்நிகழுவுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் ஹேமலதா ஆகியோர் நிறுவனத்தின் உரிமையாளர் முனைவர் கோமதிக்கு வழங்கினார். இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மகளிர்களுக்கு ஆண்களால் தந்தையர் தினத்தை முன்னிட்டு 5000 மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் பெமி நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

பெமி நிறுவனத்தின் உரிமையாளர் கோமதி இது பற்றி கறுகையில் ரசாயனம், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட நாப்கின் பயன்படுத்துவதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு மற்றும் குழந்தை இல்லாத பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் திருமணம் ஆன பெண்கள் செயற்கை முறையில் கருத்தரிப்பு ஆவதற்கான இடங்களை தேடி சென்று லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.

எனவே பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் இல்லாத இயற்கையாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை பெண்கள் பயன்படுத்த வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனம் கலந்த நாப்கின்கள் தயாரிக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story