கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : பலி எண்ணிக்கை 10 ஆனது..! மாவட்ட ஆட்சியர் இடமாற்றம..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : பலி எண்ணிக்கை 10 ஆனது..! மாவட்ட ஆட்சியர் இடமாற்றம..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இறந்தவர்களின் உடலைப்பார்த்து கதறி அழும்  உறவினர்கள் 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் காலை 5பேர் பலியான நிலையில் தற்போது மேலும் 5 பேர் பலியாகிவிட்டதாக தெரிவந்துள்ளது,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் மேலும் 5 பேர் பலியான நிலையில் தற்போது மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறி சென்றுள்ளார். ஆனாலும் விடுதலையாகி வந்து மீண்டும் சாராயம் காய்ச்சுவதையே தொழிலாக செய்துவந்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் மதுபானம் விலை அதிகம் என்பதால் பல மதுப்பிரியர்கள் வழக்கமாக இவரிடமே மது வாங்கி குடித்து வந்துள்ளனர். கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை தோடர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில்தான் அந்த பகுதி மக்கள் குடித்த கள்ளச்சாராயத்தால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே 14 பேர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தீவிர சிகிச்சையில் ஜிப்மர் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகி உள்ளனர். மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா உட்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துவிட்டனர்.

பலியாகி உள்ளனர். மற்ற மீதமுள்ள 9 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருவதாகத் தெரிகிறது.

மேலும் அவரது வீட்டில் இருந்த 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு விழுப்புரம் மண்டல தடயவியல் மையத்தில் சோதனை செய்யப்பட்டதில் சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்

இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணிநீக்கம்

மேலும் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக ரஜக் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பனி அமர்த்தப்பட்டுள்ளார்.


Tags

Next Story