கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : உயிரிழப்பு 42 ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் : உயிரிழப்பு 42 ஆக உயர்வு..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவருபவர்.

கள்ளக்குறிச்சி மீண்டும் பரபரப்புக்கு உள்ளான இடமாகிவிட்டது. 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்' என்று கூறும் அளவுக்கு இறப்புகள் நம்மை மிரளவைக்கிறது.

Kallakurichi Illicit Liquor News in Tamil

நாடுமுழுவதும் இன்று கள்ளக்குறிச்சி சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. காவல்துறைக்கு கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜன் சாராயம் காய்ச்சுபவர் என்று தெரிந்தும் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கனேவே பலமுறை சாராயம் காய்ச்சி சிறை சென்று வந்தவர் என்பது கூடுதல் தகவல்.

Kallakurichi Illicit Liquor News in Tamil

கடைசியாக வந்துள்ள தகவல்படி உயிரிழப்பு 42 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த இறப்பு கள்ளச்சாராய பலி இல்லை என்று கூறியிருந்தார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் 18ம் தேதி இரவு அப்பகுதியில் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அதை குடித்தவர்களுக்கு இரவு நேரத்தில் பெரிதும் எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. வாந்தி, மயக்கம், வயிற்று வலி என பல உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

அவர்களில் பலர் அரசு மருத்துவமனைக்கும், இன்னும் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அடுத்தநாள் அதாவது 19ம் தேதி அதிகாலையில் 4 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் பலர் சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஜிப்மர் போன்ற மருத்துமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Kallakurichi Illicit Liquor News in Tamil

தலைவர்கள் வருகை

இன்று பாஜ தமிழக தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி வந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மத்திய அரசின் திட்டங்களின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார்.

கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி?

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது கள்ளச்சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராய சம்பவம் முற்றிலும் திமுகவின் நிர்வாக திறமை இன்மையைக் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.

Kallakurichi Illicit Liquor News in Tamil

உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி வருகை தந்து இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதுடன், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவோரையும் பார்வையிட்டார். இறந்தவர்களுக்கு நிவாரண உதவியும் வழங்கினார்.

தமிழக வெற்றிக்கழகம்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு 8 மணிக்கு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவார் என்று தெரிய வந்துள்ளது. அதற்காக அவர் சென்னையில் இருந்து புறப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

காண்போர் நெஞ்சம் கலங்கிப் பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது.

நடிகர் விஷால்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும், இந்த துயரமான சம்பவத்துக்கு காரணமான ஒருவரைக்கூட தப்பிக்கவிடாமல் நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சற்று முன்னர் வந்த தகவலின்படி இறப்பு எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story