மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியர் சரயு.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சரயு வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயுதலைமையில் இன்று (03.07.2023) நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 228 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தலா ரூ.17 ஆயிரம் வீதம் 16 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு உதவித்தொகையும், 18 மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரத்து 750 மதிப்பில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ.வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story