கள்ளச்சாராய உயிரிழப்பு: தமிழக அரசை கண்டித்து மதுரை அதிமுக ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய உயிரிழப்பு: தமிழக அரசை கண்டித்து மதுரை அதிமுக  ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து மதுரையில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளில் திமுக அரசை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் திமுக அரசை கண்டித்து இன்று மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் தலைமை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், அதிமுகவின் உள்ள பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், தமிழக அரசைக் கண்டித்து குரல் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசும்போது: தமிழக அரசு கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகும் குற்றம் சாட்டினார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழகத்தில் கள்ளச் சாராயம் பெருகி வருவதை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் , இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர். இந்த விஷயத்தில், தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story