குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்

குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால்  மகிழ்ச்சியில் பொது மக்கள்

குமாரபாளையத்தில் கனமழை பெய்தது.

குமாரபாளையத்தில் சுமார் இரண்டு நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் சுமார் இரண்டு நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கத்தால் வெளியே வர தயங்கிய பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், குப்பாண்டபாளையம், தட்டான் குட்டை, எதிர் மேடு, வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை சுமார் 03:00 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவிய நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. இன்று பெரும்பாலான கோவில்கள், திருமண மண்டபங்களில் திருமணங்கள் அதிக அளவில் நடந்தன. திருமண வீட்டாருக்கு சிரமம் தராத வகையில், காலையில் மழை வராமல், மாலையில் வந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

குமாரபாளையத்தில் மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் மகிழ்ச்சி கொண்டனர்.

குமாரபாளையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிசெய்திட மாதம் தோறும் மின் நிறுத்தம் செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் செய்வது வழக்கம். அரசு பொதுத்தேர்வுகள், பாராளுமன்ற தேர்தல் ஆகிய காரணங்களால் இரண்டு மாதங்கள் பராமரிப்பு செய்திட மின் நிறுத்தம் செய்யப்படவில்லை. இரண்டு மாதங்களுக்கு பின். பராமரிப்பு காரணங்களுக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் காலை 09:00 மணியளவில் குமாரபாளையம் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. பகலில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. மின்விசிறி கூட போட முடியாத நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். கார்மேகம் சூழ்ந்து, இரவு நேரம் போல் ஆகியது. குளிர்காற்று வீசத் தொடங்கிய சில நிமிடங்களில் கனமழை பெய்தது.

இந்த மழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. பகலில் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் இருந்த பொதுமக்கள், மாலையில் வந்த கனமழையால் குளிர்ச்சி நிலவி, மகிழ்ச்சியடைந்தனர். மாலை 05:00 வரை மின்நிறுத்தம் என்று அறிவித்த மின்வாரியத்தினர், மாலை 06:30 மணியளவில் மின் இணைப்பு கொடுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story