நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பைல் படம் 

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நாளை 25ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி, ஒவ்வொரு மாதமும் சமையல் கேஸ் நுகர்வேர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, கேஸ் விநியோம் சம்மந்தமாக பொதமக்களின் குறைகள் கேட்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. இந்த ஜூன் மாதத்திற்கான சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை 25ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ந¬¬பெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், அனைத்து ஆயில் மற்றும் கேஸ் நிறுவன மேலாளர்கள், முகவர்கள், வினியோகஸ்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கூட்டத்தில் சமையல் நுகர்வோர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, சமையல் கேஸ் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story