வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா ஆய்வு

வெண்ணந்தூர் பகுதியில்  கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா ஆய்வு

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமச் சாலைகள் அமைக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 10.31 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 10.31 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிராம மக்கள், சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு தேவையான வசதிகளான கல்வி, சுகாதாரம், சந்தைப்படுத்தல் போன்ற வசதிகளை அடைய, கிராம சாலைகள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன. அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஊரகச் சாலைகள் தொகுப்பினை பயன்படுத்தி, ஏற்கனவே உள்ள சாலைகளை பராமரிக்கவும் புதிய சாலைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்துவதற்கு மண் சாலையை தார்சாலையாக மேம்படுத்துதல், பழுதடைந்த தார்சாலைகளை வலுப்படுத்துதல், பழுதடைந்த தார்சாலைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம சாலைகளை மேம்படுத்திட முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.31 கோடி மதிப்பீட்டில் 20 சாலை பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 8 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 12 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 29.60 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், தொட்டியப்பட்டி ஊராட்சியில் ரூ.77.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நரிக்கல் கரடு ஊராட்சியில் ரூ. 1.46 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்து, சாலைகளின் தரத்தை பரிசோதனை செய்து பார்த்தார். பணிகளை விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story