ஆக. 1ம் தேதி முதல் தென்னை மரத்தில் கள்ளு இறக்குவோம்; தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

ஆக. 1ம் தேதி முதல் தென்னை மரத்தில் கள்ளு இறக்குவோம்;  தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Namakkal news- தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி.

Namakkal news- ஆக. 1ம் தேதி முதல் தென்னை மரத்தில் கள்ளு இறக்குவோம் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Namakkal news, Namakkal news todayதமிழக தமிழக அரசு உடனடியாக கள்ளுக் கடையை திறக்க அனுமதிக்காவிட்டால், தென்னை விவசாயிகள் ஒன்றிணைந்து, அவரவர் நிலத்தில் வரும், ஆக. 1ம் தேதி முதல் தென்னை மரத்தில் கள் இறக்குவோம் என தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயின் விலையில், கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விசவாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த, கள்ளுக் கடையை திறக்க கோரி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தோம். தமிழக அரசு, தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் எந்த விதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிக்கும், தமிழகத்தில் பணிபுரியும் சாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், மதுபானங்களக்குத்தான், தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

கலப்படம் இல்லாத நிலையில், உடலுக்கு எவ்வித தீங்கும் செய்யாத தென்னையில் இருந்து இறக்கும் கள்ளுக்கு, தமிழக அரசு இதுவரை அனுமதியும் கொடுக்கவில்லை, முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. தமிழக அரசு, தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி, உடனடியாக கள்ளுக் கடையை திறக்க வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக கள்ளுக் கடையை திறக்க அனுமதிக்காவிட்டால், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் ஒன்றிணைந்து, அவரவர் நிலத்தில் வரும், ஆக. 1ம் தேதி முதல் தென்னை மரத்தில் கள்ளு கட்டி இறக்குவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story