மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழை; குற்றாலம் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்மழை;  குற்றாலம் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

குற்றாலம் பிரதான அருவி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையால், குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குற்றாலம் பிரதான அருவி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது குற்றால அருவிகள். இந்த குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்த காலநிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வருகை புரிகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதலே தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெல்லிய சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்ததால் இதமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளில் சீராக தண்ணீர் கொட்டியது.

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பிரதான அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வைத்து அதிகரித்தது தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர்.

காலை முதலே பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க பட்டிருந்த நிலையில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சைரன் ஒலி எழுப்பி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து புலி அருவி மற்றும் பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

Next Story