கள்ளச்சாராய விவகாரம்: போராட்டம் நடத்த முயன்ற 8 பெண்கள் உட்பட 76 பாஜகவினர் கைது

கள்ளச்சாராய விவகாரம்:  போராட்டம் நடத்த முயன்ற 8 பெண்கள் உட்பட 76 பாஜகவினர் கைது

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்த போது எடுத்த படம்

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்த முயன்றபாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 53 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, நடிகர் விஜய் உட்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 53 பேர் உயிரிழந்துள்ளதைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட பாஜக சார்பில் போராட்டம் நடைபெற இருந்தது. இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் காவல்துறைக்கும் பா.ஜ.க நிர்வாகிளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 8 பெண்கள் உட்பட 76 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story