திருவள்ளூர் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல் நல்லாத்தூர் கிராமத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மேல் நல்லாத்தூர் கிராமப் பகுதியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக சரிவரை மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த மேல் நல்லாத்தூர் கிராமத்தில் கடந்த ஆறு மாத காலமாக சரிவரை மின்சாரம் வழங்கப்படாததால் தாங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தாங்கள் பகுதியில் பச்சிளம் குழந்தைகள், வயதான முதியவர்கள், நோயாளிகள், உள்ளதாகவும் படிக்கின்ற மாணவர்கள் பள்ளியில் கொடுக்கும் ஹோம் ஒர்க்கை படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், மின்சாரம் இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகரித்து தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், நோயாளிகளும் மிகுந்த சிமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும். மனு அளித்தும் எந்தவித ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் இது போன்று பேச்சுவார்த்தை பலமுறை அதிகாரிகள் வெறும் வார்த்தையாக கூறி சென்றார்கள். ஆனால் சரிவரை மின்சாரம் வழங்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story