சார் பதிவாளர் சொகுசு காரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

சார் பதிவாளர் சொகுசு காரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 லட்சம்.

பள்ளிப்பட்டு சார் பதிவாளர் சொகுசு காரில் 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிபவர் ஸ்ரீதரன் இவர் விடுப்பில் சென்றுள்ளார்.

இவருக்கு பதிலாக திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தைச் சார்ந்த ஆர் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் மோகன்ராஜ் என்பவரை பள்ளிப்பட்டு சார் பதிவாளராக (பொறுப்பு) சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று வியாழக்கிழமை மாலை பணி முடித்துவிட்டு சொகுசு காரில் திருவள்ளூர் இவர் வீட்டிற்கு புறப்படும் பொழுது திடீரென அங்கு வந்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இவரது காரை மடக்கி சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு காரில் மறைத்து வைத்திருந்த பையில் இருந்து ரூபாய் 11 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

இந்த பணம் ஏது என்று பொறுப்பு சார்பதிவாளர் மோகன்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கேள்வி எழுப்பினர். இந்த பணம் என்னது இல்லை என்று அவர் எப்படி காருக்குள் வந்தது என்று அவர் மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பொறுப்பு சார்பதிவாளர் மோகன்ராஜ் அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதும் இந்த பணம் என்னுடையது இல்லை என்று பொறுப்பு சார்பதிவாளர் மோகன்ராஜ் தெரிவித்தார். இந்த பணத்திற்கான உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவருக்கு தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

சட்டத்திற்கு புறம்பாக இந்த பணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளுக்கு வழங்கப்பட்டதா அல்லது இவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட பத்திரப்பதிவு யார் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story