அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியை மீட்டுத்தர கிராம மக்கள் கோரிக்கை

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள  ஏரியை மீட்டுத்தர கிராம மக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியை மீட்டுத்தர கிராம மக்கள் கோரிக்கை.

பெரியபாளையம் அருகே அலஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்டு தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியை மீட்டு தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது.சுமார் 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் 2019-2020-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரி,கரையை பலப்படுத்தினர்.

இந்நிலையில்,இந்த ஏரியின் நீர் இருப்பு மூலம் விவசாயிகள் ஏரியின் சுற்றி உள்ள பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் நெற்பயிர், பூக்கள், கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில்,இந்த ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.


மேலும், மின்சார சப்ளை இணைப்பு பெற்று இரண்டு ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளனர்.

இந்த ஆழ்துளை கிணறுகள் மூலம் ஏரியிலிருந்து தண்ணீரை அருகில் உள்ள கிராமத்திற்கு கொண்டு செல்கின்றனர். மேலும்,சிலர் ஏரியில் உழுது பயிர் செய்கின்றனர்.இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள்,வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சார்பாக புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் தலையிட்டு இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி அழிஞ்சிவாக்கம் கிராம மக்களுக்கு ஏரியை மீட்டுத் தர வேண்டும். இந்த ஏரியின் நீர் இருப்பை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அழிஞ்சிவாக்கம் கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

Next Story