திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வேட்டை; 13 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வேட்டை; 13 பேர் கைது

கள்ளச்சாராய தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வேட்டை நடத்திய போலீசார் 13 பேரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வேட்டையில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து, 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கலால் பிரிவு டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று மாவட்ட முழுவதும் கள்ள சாராய தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர் .

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, செங்கம், தானிப்பாடி, ஜவ்வாது மலை, செய்யாறு , புகலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய தேடுதல் நடைபெற்றது.

இந்த தேடுதல் வேட்டையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 600 லிட்டர் கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

செங்கம் அடுத்த கட்டர் அணை கிராமத்தில், கரும்புத் தோட்டங்களிலும், வீடுகளுக்கு அருகிலும், லாரி ட்யூப் களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் வழியாக கள்ளச்சாராயம் கொண்டுவரப்படுகிறதா எனவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாகன சோதனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் ஜவ்வாது மலை முழுவதும் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கள்ள சாராயத் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story