இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை  ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!
X

யுபிஐ, பணப்பரிமாற்றம்.-கோப்பு படம் 

இந்தியாவில் யுபிஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் பிரதானமாக யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் யுபிஐ பரிவர்த்தனை உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் எட்டிப்பிடிக்க முடியவில்லை. இதில் புதிய முன்னேற்றமாக தற்போது இந்தியாவின் உதவியுடன் சில வெளிநாடுகளிலும் யுபிஐ கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் யுபிஐ கட்டமைப்பைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் என்ற அளவில் அதிகரித்து வருவதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் தான் இந்த கணக்கு எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 49 சதவீதம் உயர்ந்து 1,390 கோடியாக உள்ளதாகவும் அதேபோல், பரிவர்த்தனை மதிப்பு 36 சதவீதம் உயர்ந்து ரூ.20 லட்சம் கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPI ஐப் பயன்படுத்தி பணம் செலுத்துவதன் நன்மைகள்

  • உடனடி இடமாற்றங்கள். UPI பேமெண்ட்கள் உடனடியாகச் செயல்படுத்தப்படும், இதன் மூலம் சில நொடிகளில் பெறுநரின் கணக்கிற்கு பணம் வந்து சேரும். ...
  • வசதியான மற்றும் எளிமையானது. பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும் பயனர் நட்பு இடைமுகத்தை UPI வழங்குகிறது. .
  • பணம் செலுத்தும் போது வங்கி விவரங்கள் தேவையில்லை. ...
  • பாதுகாப்பான பரிவர்த்தனைகள்.

Tags

Next Story