அவர் படத்திலிருந்து வெளியேறிய ஏ ஆர் ரஹ்மான்..! இப்படி ஒரு காரணமா?

X

AR Rahman Opt out from suriya 45

சூர்யா படத்திலிருந்து ஏ ஆர் ரஹ்மான் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகிட்டத்தட்ட உறுதியான தகவலாக பார்க்கப்படுகிறது.


அவர் படத்திலிருந்து வெளியேறிய ஏ ஆர் ரஹ்மான்..! இப்படி ஒரு காரணமா?

முக்கிய தகவல்: நடிகர் சூர்யாவின் 45 ஆவது படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் பின்னணி

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. கங்குவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா, தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.

தற்போதைய நிலை

'சூர்யா45' படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். அண்மையில், கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இப்படத்துக்கான பூஜை நடத்தப்பட்டு, அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது.

ஏ.ஆர்.ரகுமானின் பங்கு

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரப் பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமானும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக, பல நேர்காணலில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார்.

திடீர் மாற்றம்

இந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, படத்தின் ஒளிப்பதிவாளரை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்பு

இது குறித்து விசாரித்ததில், ஏ.ஆர்.ரகுமான் தானே விலகியதாகவும், இன்னும் ஓரிரு நாளில் படக்குழு புதிய இசையமைப்பாளரை அறிவிக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.



Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்