வேலையைத் தொடங்கிய ஜெயம்ரவி! மாலையும் கழுத்துமாக அந்த நடிகையுடன்! யார் தெரியுமா?

வேலையைத் தொடங்கிய ஜெயம்ரவி! மாலையும் கழுத்துமாக அந்த நடிகையுடன்! யார் தெரியுமா?
X
வேலையைத் தொடங்கிய ஜெயம்ரவி! மாலையும் கழுத்துமாக அந்த நடிகையுடன்! யார் தெரியுமா?

விவாகரத்து விசயத்தில் கடந்த ஒரு மாதமாக டிரெண்டிங்கில் இருந்து வந்த ஜெயம் ரவியும், தன் ரசிகர்களிடமே கொஞ்சம் கண்டிப்பாக நடந்துகொண்டதாக சர்ச்சைக்குரிய டிரெண்ட்டான பிரியங்கா மோகனும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என அடுத்தடுத்த டிரெண்ட் செட்டிங் படங்களால் தமிழ் சினிமாவில் நல்ல பெயரை எடுத்த இயக்குநர் எம் ராஜேஷ். தொடர்ந்து நகைச்சுவை படங்களைக் கொடுத்து வந்தவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தால் மார்க்கெட் இழந்தார். அதன்பிறகு பெரிய பட வாய்ப்பு எதுவுமின்றி தவித்த வந்தவருக்கு ஜெயம் ரவி மூலமாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியுள்ளது.

தன்னை மெருகேற்றிக்கொண்டு மீண்டும் தனது பாணி கதையை எடுத்துள்ளார் ராஜேஷ். ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில், இன்னும் பல நட்சத்திரங்களுடன் பிரதர் திரைப்படம் வரும் தீபாவளியை ஒட்டி ரிலீஸ் ஆக இருக்கிறது.

மக்காமிஷி பாடல் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டது இந்த படம். இதனால் அதிக எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள்தான் தற்போது வைரலாகி வருகின்றன. இதை ரசிகர்கள் சிலர் தவறாக புரிந்துகொண்டு பின் விசயம் தெரிந்து ஓ அப்படியா என சொல்லி செல்கின்றனர்.

தற்போது குடும்ப நச்சரிப்பிலிருந்து தான் வெளியே வந்துவிட்டதாக நினைக்கும் ஜெயம் ரவி, தனது அடுத்தடுத்த படங்களின் வேலைகளைத் துவங்கியுள்ளார். வரும் தீபாவளிக்கு அவரது பிரதர் திரைப்படம் வர இருப்பதால் அதற்கான புரமோசன் வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்