நத்தம் அருகே கணவனை அடித்து கொலை செய்த மனைவி கைது

நத்தம் அருகே கணவனை அடித்து கொலை செய்த மனைவி கைது
X
நத்தம் அருகே கணவனை அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நத்தம் அருகே கணவனை அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டி ராஜாகுலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). லாரி டிரைவர். இவரது மனைவி பாண்டீஸ்வரி (33).ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு ராஜேந்திரன் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பாண்டீஸ்வரி வீட்டில் இருந்த கடப்பாரையால் கணவனை தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பாண்டீஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!