குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

KKN கலை,அறிவியல் கல்லூரியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஈரோடு செயலாக்க, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன்.

JKKN கலை, அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டமும் வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செந்தூர்ராஜா கலையரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சி இறை வணக்கத்துடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமை வகித்தார். இவ்விழாவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் வேணுகோபால் வரவேற்புரையாற்றினார்.

கல்லூரியின் டீன் முனைவர் V.R.பரமேஸ்வரி, முதல்வர் (பொறுப்பு) முனைவர். சீரங்கநாயகி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பு விருந்தினர்களை கௌரவப்படுத்தினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ஈரோடு செயலாக்க, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை ஒன்று சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது பற்றியும், இன்றைய இளைஞர்கள் வாகனத்தில் பயணிக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், சாலை மற்றும் போக்குவரத்து தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி மாணவர்களிடம் கலந்துரையாடினார்கள்.

இறுதியாக தமிழ்த்துறை தலைவர் குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இவ்விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.

இன்றைய சூழலில் வாகனங்கள் அதிகரித்துவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதனால் விபத்துக்களும் அதிகமாகிவிட்டன. குறிப்பாக நாட்டிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதாக தெரியவந்துள்ளது. இருசக்கர வானங்களில் வரும் இளைஞர்கள் அதிவேகமாகச் சென்று விபத்தில் சிக்குகின்றனர்.

சாலை விதிமுறைகளை இளைஞர்களுக்கு தெரியவைப்பதற்காக இதைப்போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் நடத்துவது அவசியம் ஆகும். போக்குவரத்து அதிகாரிகளும் இதில் முக்கிய பங்கெடுத்து மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பாடங்களாக மனதில் பதியவைக்கவேண்டும். எதிர்காலத்தில் விபத்தில்லா தமிழகம் என்ற நிலையை எட்டவேண்டும்.

அதற்கு பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். சாலை விதிமுறைகளை பின்பற்றுவதில் நாம் மேலை நாடுகளைப்போல நடந்துகொள்ளவேண்டும். விதிகளை மதிக்கும் மனப்பான்மை நமக்கு ஏற்படவேண்டும்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்