கண்ணை மூடுனா தூக்கமே வல்லையா....? நைட் இனி இத செஞ்சிட்டு படுங்க...!
இரவு தூக்கம் அவசியம்:
இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் புத்துணர்ச்சியை தருவது தூக்கம் மட்டுமே.மனிதன் சுறுசுறுப்பாக ஒரு வேலையை செய்ய வேண்டும் என்றால் நல்ல தூக்கம் அவசியம் ஆகும்.நல்ல தூக்கம் இல்லையென்றால் அந்த நாள் மிகவும் சோம்பலாக இருக்கும்.ஒரு சராசரி மனிதன் கட்டாயம் 8 மணிநேரம் உறங்க வேண்டும்.நல்ல தூக்கம் இல்லையென்றால் உடலில் பாதிப்பு வரும்.தற்போதைய சூழலில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளால் இரவில் தூக்கமின்மை ஏற்படுகிறது.இதை தவிர்க்க சிறந்த வழிகள் உள்ளது.நல்ல தூக்கம் வேண்டுமென்றால் தூங்கும்முன் இந்த பானங்களை பருக வேண்டும், அதை பருகினால் நன்றாக உறங்குவீர்கள்.அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போமா? அதுமட்டுமின்றி தூக்கம் வர என்ன செய்ய வேண்டும் என்பதை காண்போம்.
தூக்கம் வர பருகும் பானங்கள்!
கெமோமெலன் டீ :
கெமோமெலன் டீ இது கெமோமெலன் என்ற பூவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தேநீர் ஆகும். இதை பருகுவது உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும் மெலோட்டினினை சுரக்கச் செய்யும். இதை பருகினால் நன்றாக உறக்கம் வரும்.
மஞ்சத்தூள் பால் :
மஞ்சள் பால் உங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் உதவும் நீங்கள் பாலில் அல்லது சூடான தண்ணீரில் மஞ்சள் தூளை சேர்த்து பருகலாம். மஞ்சள் என்பது கிருமி நாசினி இதனால் நம் உடலுக்கு நன்மையை சேர்க்கும்.பாலும் உடலுக்கு கால்சிய சத்தை தரும்,இதனால் உறக்கம் நன்றாக வரும்.
பாதாம் பால் :
பாதாம் பாலையும் பருகலாம். பாதாம் பால் சுவையானதும் கூட. எனவே உங்களுக்கு பருகுவதும் எளிது. நீங்களே பாதாம் பால் மிக்ஸை வீட்டிலே தயாரித்துக்கொள்ளவும் முடியும்.இதுவும் ஒரு சிறந்த பானம் இதையும் பருகினால் தூக்கம் வரும்.
செரிப்பழம் சாறு :
செரிப்பழம் சாறையும் பருகலாம் இதுவும் உறக்கத்திற்கு உதவும் .ஆனால் எளிதில் கிடைப்பது கடினம் விலையும் அதிகம் ஆகையால் மாதத்தில் ஒருமுறை பருகலாம்.பருகினால் நன்றாக உறக்கம் வரும்.
தூக்கம் வரவில்லையா என்ன செய்யலாம் :
உறக்க நேரம் தினமும் 7-8 மணி நேரம் உறக்கம் கட்டாயம் வேண்டும்.. அதற்கு மேல் உறங்க தேவையில்லை. இரவில் தான் உறங்கவேண்டும். உடல் நல பாதிப்புகள் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அதிகபட்சமாக 8 மணி நேர உறக்கம் போதுமானது. மேலும் இதை அவர்கள் இரவு நேரத்தில் வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 6 வரை இருக்கலாம். இதை என்றும் மாற்றிவிடக்கூடாது. அப்போதுதான் உறக்க சுழற்சியில் மாற்றம் இருக்காது. படுத்த 20 நிமிடத்தில் உறக்கம் வரவில்லையென்றால், எழுந்து உங்களை மனநிம்மதி செய்துவிட்டு வந்து படுத்துக்கொள்ளுங்கள். வாசிப்பு அல்லது அமைதிப்படுத்தும் இசையை கேட்கவேண்டும். எப்போது சோர்கிறீர்களோ அப்போது உறங்கச் செல்லுங்கள்.
சாப்பிடாமல் உறங்க சென்றால் தூக்கம் வராது அதனால் இரவு நேரங்களில் அளவாக சாப்பிட வேண்டும். நீங்கள் உறங்கும் அறை குளுமையாகவும், அமைதியாகவும், இருள் சூழ்ந்தும் இருக்கவேண்டும். வெளிச்சம் வந்தால், அது நீங்கள் உறங்குவதை தடுக்கும் . வெளிச்சத்தை வெளியிடும் திரைகளை உறங்கச் செல்லும் முன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். படுக்கையறை அமைதியாக இருக்கவேண்டும். அதுதான் உறக்கத்தை மென்மையாக்கும்.பகலில் குட்டி தூக்கத்தை குறைக்கவேண்டும் .பகலில் நீண்ட நேரம் உறங்கிவிட்டால் அது இரவு உறக்கத்தை பாதிக்கும். எனவே பகலில் அரை மணி நேரத்துக்கு மேல் உறங்காதீர்கள். இரவில் பணிபுரிபவர் என்றால், மதியத்துக்கு மேல் உறங்கினால், இரவு பணிக்கு நீங்கள் சுறுசுறுப்பாக செல்ல அமையும்.
கட்டாயம் ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் . ஆனால் உறங்கச் செல்லும் முன் கடும் உடற்பயிற்சி செய்யக்கூடாது. கவலைகளை தூக்கி வீசிவிடுங்கள். நடப்பது நடந்தே தீரும் என்பதால் எந்தக் கவலையும் இன்றி உறங்கச் செல்லுங்கள். மனஅழுத்தத்தை குறைக்க யோகா போன்றவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu