நீரிழிவுக்கு எதிரான பெரும் முன்னேற்றம்: சென்னையில் திறக்கப்பட்ட முதல் பையோவங்கி!

நீரிழிவுக்கு எதிரான பெரும் முன்னேற்றம்: சென்னையில் திறக்கப்பட்ட முதல் பையோவங்கி!
X
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவெனில், இந்தியாவின் முதல் நீரிழிவு பயோபேங்க் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.


சென்னையில் இந்தியாவின் முதல் நீரிழிவு பயோபேங்க்: அதன் நோக்கம் மற்றும் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்

சென்னையில் இந்தியாவின் முதல் நீரிழிவு பயோபேங்க்: அதன் நோக்கம் மற்றும் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்

உலகளவில் சர்க்கரை நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு நாளுக்கு நாள் இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் 2023-க்குள் உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் 578 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவெனில், இந்தியாவின் முதல் நீரிழிவு பயோபேங்க் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த பயோபேங்க்கானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

சென்னையில் நிறுவப்பட்டுள்ள நீரிழிவு பயோபேங்க்

  • இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நிறுவப்பட்டது
  • ICMR மற்றும் MDRF ஆகியவற்றின் ஒத்துழைப்பு
  • சர்க்கரை நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கோளாறுகள் குறித்து ஆய்வு
  • மாதிரிகளை பதப்படுத்தி, சேமித்து ஆய்வுகள் மேற்கொள்ளல்

இந்த பயோபேக்கில் சர்க்கரை நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கோளாறுகள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்விற்காக பயோபேங்க்கில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை சரியாக பதப்படுத்தி, சேமித்து, ஆய்வுக்கான பணி மேற்கொள்ளப்படும். பயோபேங்க்குகளில் மாதிரிகள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த மாதிரிகளை ஆய்வு செய்து, சர்க்கரை நோய்க்கான காரணங்களை ஆராய்ந்து, அதன் தடுப்பு வழிகளை கண்டறியும் பணி இங்கு மேற்கொள்ளப்படும்.

நீரிழிவு பயோபேங்க்கின் நோக்கம்

சென்னையில் நிறுவப்பட்டுள்ள முதல் நீரிழிவு பயோபேங்க்கின் நோக்கமே, சர்க்கரை நோய்க்கான ஆரம்பகால சிகிச்சை மற்றும் புதிய உயிரிகளை அடையாளம் காண உதவுவதாகும். மேலும் இந்தியாவில் சர்க்கரை நோயின் தனித்துவமான வடிவங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆரோக்கிய பிரச்சனைகளை ஆய்வு செய்வதும் ஆகும். இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தடுக்கலாம்.

புள்ளிவிவரங்களின்படி, 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் மற்றும் 13.6 கோடி ப்ரீடியாபயாட்டீஸ் வழக்குகள் உள்ளன. இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும். ஒருவரை பலவீனப்படுத்தும் நோயின் பரவலான தாக்கம் இருந்தபோதிலும், நீரிழிவு ஆய்வுக்கு உதவும் உயிரியல் மாதிரிகளின் பெரிய அளவிலான களஞ்சியங்கள் பற்றாக்குறை இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீரிழிவு பயோபேங்கில் உள்ள இரத்த மாதிரிகளின் எண்ணிக்கை

இரத்த மாதிரிகள் 75,000
சீரம் மாதிரிகள் 10,000
மரபணு மாதிரிகள் 16,000
சிறுநீர் மாதிரிகள் 5,000

பயோபேங்க்குகள் ஏன் முக்கியம்?

புற்றுநோய், கல்லீரல் நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான கொடிய நோய்களுக்கான பயோபேங்க்குகள் இந்தியாவில் ஏற்கனவே உள்ளன. இந்த பயோபேங்க்குகளில் இந்த கொடிய நோய்கள் குறித்து விரிவாக அறியவும், அதற்கான சிகிச்சையை மேம்படுத்துவது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் சர்க்கரை நோய்க்கான பயோபேங்க்குகள் இல்லை.

எனவே இந்தியாவில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளின் அளவை கருத்தில் கொண்டு இந்த நீரிழிவு பயோபேங்க் நிறுவப்பட்டுள்ளது. மருத்துவத்தில் முன்னேற்றத்தைத் தூண்டும் உயர்தர உயிரியல் பொருட்களை வழங்குவதன் மூலம் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் Biobanks முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் மொத்தம் எத்தனை சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்?

ICMR மற்றும் India Diabetes Study ஆகியவற்றின் ஆய்வின்படி,

  • 11 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • 13 கோடிக்கும் அதிகமாக சர்க்கரை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது
  • சர்க்கரை நோயால் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்

இந்தியாவிலேயே சர்க்கரை நோயாளிகள் எந்த மாநிலத்தில் அதிகம் உள்ளனர்?

ICMR அறிக்கையின் படி, இந்தியாவில் 31.5 கோடி பேர் உயர் இரத்தஅழுத்தத்தாகும், 53.1 கோடி பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே சர்க்கரை நோயாளிகள் கோவாவில் (26.4 சதவீதம்) அதிகம் உள்ளனர். அதன் பின் புதுச்சேரி 26.3 சதவீதம், கேரளா 25,5 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். பின்னர் உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். முக்கியமாக கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர்.

உலகில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகள்

  1. சீனா
  2. இந்தியா
  3. அமெரிக்கா
  4. பாகிஸ்தான்
  5. இந்தோனேசியா
  6. பிரேசில்

லான்செட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, உலகில் மொத்தம் 828 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்.

முடிவுரை

சர்க்கரை நோய் உலகம் முழுவதும் பரவலாக உள்ள ஒரு நோயாகும். இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நிறுவப்பட்டுள்ள நீரிழிவு பயோபேங்க், சர்க்கரை நோயின் காரணங்களை ஆராய்ந்து, புதிய சிகிச்சை முறைகளை கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ள உதவும். இதன் மூலம், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகள் கண்டுபிடிக்கப்படும். எதிர்காலத்தில் இந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இந்தப் பயோபேங்க்கின் ஆய்வுகள் பெரிதும் துணை புரியும் என நம்பலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!