கேன்சர்க்கு இனி குட் பை.. புதிய தடுப்பூசி உருவாக்கி உலகையே அதிர வைத்த ரஷ்யா !

கேன்சர்க்கு இனி குட் பை.. புதிய தடுப்பூசி உருவாக்கி உலகையே அதிர வைத்த ரஷ்யா !
X
கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்யா புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியதாக அறிவிப்பு

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் mRNA தடுப்பூசி

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்.

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், கடைசி டெஸ்ட் நடந்து வருவதாகவும் விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

புடின் புற்றுநோய் தடுப்பூசி குறித்து பேச்சு

கடந்த சில மாதங்களுக்கு முன்பே புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செயல்பாடு குறித்து விளக்கம் இல்லை

விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது என்ன மாதிரியான வேக்சின்.,. ஊசியா.. வேறு எதுவுமே? எப்படி செயல்படும்? என்ன தொழில்நுட்பம்? என்றெல்லாம் புடின் விளக்கம் அளிக்கவில்லை.

கேன்சர் பாதிப்பு: வருடங்கள் ஓடினாலும்

வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது.

கீமோதெரபி கேன்சருக்கு எதிரான முக்கிய சிகிச்சை

இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.

அமெரிக்காவில் கேன்சர் குணமடைந்த சம்பவம்

கடந்த வருடம் கூட அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

dostarlimab மருந்து மூலம் கேன்சர் நோயாளிகள் முற்றிலும் குணம்

அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது,. இந்த மருந்து வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர். மிக சிறிய அளவில்தான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், எளிதாக dostarlimab என்ற மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர்.

புற்றுநோய் செல்களை அகற்றும் புதிய முறை

ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை கேன்சருக்கு எதிராக செய்துள்ளது. புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிர வைத்து.. அந்த அதிர்வை வைத்து கேன்சர் செல்களை கொல்லும் மருத்துவத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிளாஸ்மோன் மூலக்கூறுகள் மூலம் கேன்சர் செல்களை அழிப்பது

மருத்துவ இமேஜிங்கிற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சாய மூலக்கூறை வைத்துதான் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த மூலக்கூறில் இருக்கும் அணுக்கள் ஒரே மாதிரியாக அதிர்வுறும் குணம் கொண்டவை. சில ஒளி தூண்டுதலுக்கு இவை ஒரே மாதிரியாக ஒத்திசைவோடு அதிரும். இப்படி ஒரே மாதிரியாக அதிர்வுறும் மூலக்கூறுகள் பிளாஸ்மோன் என அழைக்கப்படும், இந்த பிளாஸ்மோன் கேன்சர் செல்கள் மீது வைக்கப்படும் போது .. அது அகச்சிவப்பு ஒளியால் தூண்டப்படும்போது,​​​​புற்றுநோய் செல்களின் செல் சவ்வு சிதைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூலக்கூறுகளின் நடனம் காரணமாக புற்றுநோய் பலி

அதாவது இந்த மூலக்கூறுகள் போடும் நடனம் காரணமாக புற்றுநோய் பலியாகிவிடும் என்கிறார்கள். நேச்சர் கெமிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்த முறை 99 சதவீத செயல்திறனைக் கொண்டு இருந்தது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த முறையில் 99 சதவிகித புற்றுநோய் செல்கள் மாறுகின்றன.

எலிகளில் பரிசோதனை வெற்றி

மேலும் மெலனோமா கட்டிகளைக் கொண்ட எலிகள் பாதி சிகிச்சைக்குப் பிறகு முற்றிலுமாக குணமடைகின்றன. முற்றிலுமாக இவை புற்றுநோயற்றதாக மாறி உள்ளது. கிட்டத்தட்ட இந்த செல்கள் ட்ரில்லிங் மிஷின் போல செயல்பட்டு கேன்சர் செல்களை 99 சதவிகிதம் வரை கொண்டு கேன்சரை குணப்படுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதிய புற்றுநோய் சிகிச்சை நம்பிக்கை அளிக்கிறது

இந்த புதிய சிகிச்சை முறைகள் புற்றுநோய் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கின்றன. இருப்பினும், இந்த முறைகள் மேலும் விரிவான மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும், பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுமா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பக்க விளைவுகள் மற்றும் நீண்ட கால பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

எதிர்கால சிகிச்சை முறைகள்

தொடர்ந்து புதிய புற்றுநோய் சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், குறிப்பிட்ட புற்றுநோய் இலக்குகளை குறிவைத்தல் மற்றும் துல்லியமான மருந்து வழங்கல் போன்ற துறைகளில் முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எதிர்காலத்தில், புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்தவும், தடுக்கவும் புதிய வழிகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த புதிய பிரேக்த்ரூக்கள் புற்றுநோயை எதிர்த்து போராடும் உலகளாவிய முயற்சிகளில் முக்கிய படிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கூட்டு முயற்சிகள் புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் புதிய சாதனைகளை படைக்கும் என்றும், இறுதியில் இந்த கொடிய நோய்களுக்கு எதிராக வெற்றி பெறும் என்றும் நம்பலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!