ஆசியாவிலேயே பணக்கார கிராமங்கள் இந்தியாவில்..! எப்படி பணக்காரர் ஆனாங்க..? ஆச்சர்யம்தான்..!

ஆசியாவிலேயே பணக்கார கிராமங்கள் இந்தியாவில்..! எப்படி பணக்காரர் ஆனாங்க..? ஆச்சர்யம்தான்..!
X
வளமிகு கிராமம்.மாதப்பர் 
ஆசியாவின் பணக்கார கிராமங்களைக் காண்போம் வாருங்கள். இந்தியாவில் இன்னும் வெளியே தெரியாத பணக்கார கிராமங்கள் நாட்டின் பொக்கிஷங்கள்.

ஆசியாவிலேயே பணக்கார கிராமங்கள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய கிராமங்களே அதிகம். அந்த வரிசையில் உங்கள் பார்வைக்கு இந்திய பணக்கார கிராமங்களை பார்ப்போம், வாங்க.

ஆசியாவிலேயே பணக்கார கிராமங்களில் பல இந்தியாவில் உள்ளன. அதன் இயற்கை வளம், செல்வம், இயற்கை அழகு மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் கலாசார தன்மையுடன் இணைந்து காணப்படுகிறது. உண்மையில் நம்மை ஆச்ரயப்படுத்தும் இந்த கிராமங்கள் நகரங்களைக் காட்டிலும் அனைத்து வசதிகளையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்கின்றவர்களாக இருக்கின்றனர். இதோ இந்தியாவின் ஐந்து பணக்கார கிராமங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.


குஜராத் மாநிலத்தில் உள்ள மாதபர் கிராமம் :

குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள மதாபர் கிராமம், ஆசியாவின் பணக்கார கிராமங்களில் ஒன்றாகும். இந்த நகரம் நம்பமுடியாத அளவிற்கு செல்வத்தைக் கொண்டுள்ளது. மொத்தம் ரூ.5,000 கோடிக்கு மேல் 7,600 வங்கிக் கணக்குகளில் உள்ளன.

கிராமத்தின் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி முறை போன்றவைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்திய குடியுரிமை இல்லாத வெளிநாடுவாழ் இந்தியர்கள்(என்ஆர்ஐ) செய்துள்ளனர். இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு முதன்மையான பொறுப்பானவர்கள் இந்த வெளிநாடுவாழ் மக்களே. கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக விளங்கும் மதாபர் கிராமத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது.


மகாராஷ்டிராவின் ஹிவாரே பஜார்

ஒரு காலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சமூகமாக இருந்த மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹிவாரே பஜார் இப்போது நாட்டின் பணக்காரர்கள் வாழும் கிராமங்களில் ஒன்றாக உள்ளது. நீர் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக செயல்படுத்தி விவசாய வெற்றிக்கு வித்திட்டனர். அதற்கு போபத்ராவ் பவாரின் தலைமையே அந்த வெற்றிக்கு காரணம். அவரது அற்புதமான புதுமையான நீர் மேலாண்மை திட்டத்தின்படி செயல்பட்டதால் இந்த தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

இன்று 60 க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் ஹைவேர் பஜாரில் வசிக்கின்றனர். மேலும் கிராமவாசிகள் பால் மற்றும் நிலையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராமம் அதன் சிறந்த வாழ்க்கை நிலை மற்றும் அந்த சமூக மக்களால் பின்பற்றப்பட்ட விவசாய வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் புகழ் பெற்றதாக உள்ளது.


குஜராத் மாநிலம், புன்சாரி கிராமம் :

புன்சாரி, குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். அது புதுமையான மற்றும் சிறந்த கிராமப்புற நிர்வாகத்திற்கு முன்மாதிரியான கிராமம் ஆகும். அந்த கிராமத்து மக்கள் தற்காலத்தில் உள்ள நவீன வசதிகளுடன் நகர்ப்புறங்களுக்கு இணையாக வாழ்ந்துவருகின்றனர்.

இந்த கிராமத்தில் குளிரூட்டப்பட்ட பள்ளிகள், CCTV கேமராக்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பான பள்ளி சூழல் மற்றும் Wi-Fi வசதிகள் ஆகியவை அடங்கும். புன்சாரியின் செழிப்பு வலுவான உள்ளூர் தலைமை மற்றும் அரசாங்க திட்டங்களை திறம்பட பயன்படுத்துவதில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.

குக்கிராமமாக இருந்த இந்த கிராமம் இப்போது இந்தியாவில் செல்வம் மிக்கதாகவும் மிகவும் வளர்ச்சியடைந்த கிராமமாகவும் உள்ளது. ஏனெனில் ஒரு முழுமையான வளர்ச்சிக்கு அந்த கிராம தலைவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்காக நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் ஷிங்னாபூர், ஷானி,

சனீஸ்வரன் கோயிலுக்கு பெயர் பெற்ற மகாராஷ்டிராவில் உள்ள ஷானி ஷிங்னாபூர், இந்தியாவின் பணக்கார கிராமங்களில் ஒன்றாகும். மேலும் குறிப்பாக அது ஒரு ஆன்மீக தலத்துக்கு சிறப்பானதாகும். இந்த கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அங்குள்ள வீடுகளில் கதவுகள் இல்லாமல்தான் இருக்கும். பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை குறிப்பதாக உள்ளது.

இந்த கிராமத்துக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்கள் சனீஸ்வரனை வணங்குவதற்காக வருகை தருகின்றனர். அவ்வாறு பக்தர்களின் வருகை அதன் செல்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. விவசாயம் செய்வதுடன் கூடுதலாக சுற்றுலா கிராமத்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது.


இமாச்சல பிரதேசத்தின் மராக் கிராமம் :

ஏராளமான ஆப்பிள் பழத்தோட்டங்கள் நிறைந்து இருப்பதால், இமாச்சல பிரதேசத்தில் உள்ள மராக், ஆசியாவின் "ஆப்பிள் கிங்" என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் பணக்கார கிராமங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கிராமத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் ஆப்பிள் சாகுபடியைச் சார்ந்துள்ளது, பிரீமியம் ஆப்பிள்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆப்பிள் உற்பத்தியால் அந்த கிராமத்தின் செல்வம் உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த கிராமத்து மக்கள் நல்ல வாழ்க்கைத் தரத்துடன் சிறந்த உள்கட்டமைப்பை பெற்றுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!