வாழ்வில் நிரந்தர ஊன்று கோல் எதுவென்று தெரியுமா?

வாழ்வில் நிரந்தர ஊன்று கோல் எதுவென்று தெரியுமா?
X
உங்கள் வாழ்வில் நிரந்தர ஊன்றுகோல் என்றும் உங்கள் "மனைவி" மட்டும் தான்.

உங்கள் வாழ்வில் நிரந்தர ஊன்றுகோல் என்றும் உங்கள் "மனைவி" மட்டும் தான்.

நீங்கள் பாசத்தை அள்ளி வீசி வளர்த்த உங்கள் பிள்ளைச் செல்வங்கள் பெருத்து ஆளாகி திருமணம் முடித்ததும் உங்களை விட்டும் தூரமாகிவிடலாம். ஊர்விட்டுச் செல்லலாம், நாடு துறந்தும் போகலாம்.

நீங்கள் ஒரு காலம் ஆனந்தமாக உறவாடிய அன்பான சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பம் என்று பிஸியாகி விடுவார்கள். இறுதி காலத்தில் கைபிடிக்க சகோதரனும் வரமாட்டான், கண்ணீர் விட சகோதரியும் வர மாட்டாள். எல்லோரும் அவரவர் வாழ்வென்று பிரிந்து செல்வார்கள்.

உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் என யாருமே என்றும் கூடவே இருக்க வரமாட்டார்கள்.

இந்த உலகம் அவர்களை உங்களிடமிருந்த பலவந்தமாக பறித்தெடுத்துக்கொள்ளும். வாழ்வென்னும் ரயில் பயணத்தில் உங்களோடு இடைநடுவில் கடைபிடித்து ஏறிக்கொண்ட உங்கள் பாச மனைவிதான் உங்களோடு கூடவே இருக்கப் போகிறாள்.

நீங்கள் என்றும் சாய்ந்திருக்க அவள் தோள்கள் மாத்திரமே உங்களுக்காக காத்திருக்கும். நீங்கள் நோய்வாய்ப்படும் போது... முதுமை அடையும் போது... துக்க துயரங்களில் பங்கெடுக்க... ஆத்திர அவசரம் என்று வரும் போது... என்றும் உங்களை தாங்கும் ஊன்றுகோல் ஆதலால் உங்கள் உறவுக்கு உரமூட்டுங்கள். நீங்கள் பரஸ்பரம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அனாதரவாக மரணிக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்... உண்மையை உணர்ந்து மனைவியை நேசித்து வாழுங்கள்.

Tags

Next Story