தன்மானம் சீண்டப்படும்போது திமிரு வருவதுதான் சிங்கத்திற்கு அழகு..!

Mass Attitude Quotes in Tamil
X

Mass Attitude Quotes in Tamil

Mass Attitude Quotes in Tamil-மானம் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியாது. மான அவமானங்களுக்கு கட்டுப்பட்டே இந்த சமுதாயம் ஒரு நெறிமுறைக்குள் இயங்கி வருகிறது.

Mass Attitude Quotes in Tamil

மானத்தோடு வாழவேண்டும் என்று எண்ணும் எந்த மனிதனுக்கும் தன்மானம் சீண்டப்படுமேயானால் சிங்கமாய் சீறி கர்ஜிப்பது திமிரு அல்ல, மானத்தின் வெளிப்பாடு. கட்டுப்பாடு, ஒழுக்கம், பண்பு போன்ற நெறிமுறைகளுடன் வாழுபவர்கள் அமைதியான மனிதர்களாகத்தான் இருப்பார்கள். தனக்கு எதிராக பொய்யான ஒரு பிரச்னை எழும்போதுதான், அவர்களின் சீற்றம் வெளியே தெரியும். சாது மிரண்டால் காத்துக்கொள்ளாது என்பதற்கு அதுதான் உண்மையான பொருளாகும். ஓகேங்க.. இப்போது திமிரு என்று சொல்லப்படும் தமிழ் மேற்கோள்களை பார்ப்போம் வாங்க..

  • கற்றுக்கொள்வதில் முட்டாளாக இரு. கற்றுக்கொடுப்பதில் புத்திசாலியாக இரு.
  • பிறரிடமிருந்து கற்றுக்கொள், ஆனால் அவரையே பின்பற்றாதே
  • நீ வெற்றி பெறுவதற்காக பிறரை தோற்கடிக்க ஒருபோதும் நினைக்காதே!!
  • அன்பின்றி உங்களால் வாழ முடியாது என்று கூறுகிறார்கள் ... அன்பை விட ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்!
  • பறப்பதற்கு தைரியம் இல்லாத போது சிறகுகள் இருந்தும் பயனில்லை
  • மற்றவர்களை பைத்தியமாக்கும் அளவிற்கு மகிச்சியாய் இருங்கள்
  • என்னைப் பற்றிய உன் கருத்து, நான் யார் என்பதை ஒருபோதும் மாற்றாது.
  • தலை சாயும் நிலையே வந்தாலும் தன்மானத்தை ஒருபோதும் இழக்காதே
  • உன் பலத்தை அறிய ஆயிரம் பேருடன் சண்டையிடு. உன் பலவீனத்தை அறிய அரைமணி நேரம் தனித்திரு
  • அடுத்தவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழ வேண்டுமெனில் செத்துவிடு
  • என் மிகப் பெரிய பலவீனம் நீ காட்டும் உண்மையான அன்பு
  • என்னை உனக்கு பிடிக்கவில்லையெனில் நீ விலகி விடு. என்னை மாற்ற நினைக்காதே!
  • நான் நானாக இருப்பதாலோ என்னவோ என்னை பலருக்கு பிடிக்காது
  • விசுவாசம் ஒரு விலை உயர்ந்த பரிசு, அதை மலிவான மக்களிடம் எதிர்பார்க்காதே!!
  • அழகு உங்கள் கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் ஆளுமை உங்கள் இதயத்தை ஈர்க்கிறது.

    கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு?

  • சுய அன்பு, சுய மதிப்பு மற்றும் சுய மரியாதையை பெற சுயநலமாக இரு
  • யாரையும் அதிகம் சார்ந்து இருக்காதே.. அவரது இழப்பு உன்னை பெரிதும் பாதிக்கும்!!
  • மற்றவர்கள் என்னை புறக்கணிப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் என்னை இழக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை
  • வலிகள் எப்போதும் கண்ணீராய் வெளிப்படுவதில்லை. அது சில நேரங்களில் புன்னகையாகவும் வெளிப்படும்.
  • நீ சம்பாதிக்கக்கூடிய ஒன்றை ஒருபோதும் பிச்சை எடுக்காதே!!
  • மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் மிகச் சிறிய விஷயமே மனப்பான்மை
  • நீயே உன்னை பலவவீனன் என்று நினைப்பதே மிகப்பெரிய பலவீனம்
  • நல்ல நண்பனைக் கண்டுபிடிப்பது கடினம், விட்டுப்பிரிவது கடினம், மறப்பது மிக மிகக் கடினம்.
  • கோபத்தில் முடிவெடுக்கதே. மகிழ்ச்சியில் வாக்கு கொடுக்கதே. இரண்டுமே ஆபத்தில் முடியும்
  • எதிரியே ஆனாலும் துரோகத்தால் தோற்க்கடிக்காதே..
  • உனக்கான கதவு திறக்கவில்லையெனில், உனக்கென ஒரு வழியை உருவாக்கு
  • தீப்பெட்டியின் கடைசி குச்சியில் இருக்கும் கவனம், முதல் குச்சியில் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்.
  • உன் பெயரை நினைவில் கொள்ள இந்த உலகிற்கு ஒரு காரணத்தை கொடுப்பதே உன் உண்மையான வெற்றி
  • பிறருக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனில் ஊமையாக இரு.
  • பொறுமையைக் கையாளும் ஒருவன் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுகிறான்
  • நீ வெற்றிபெற வேண்டுமெனில் செவிடனாய் இரு
  • நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சிக்காதே. அதைவிட பெரிய முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை
  • நம்பிக்கையே நீங்கள் அணியக்கூடிய சிறந்த ஆடை.
  • உன்னை மகிழ்வித்த ஒன்றிற்காக நீ ஒருபோதும் வருந்தாதே.
  • மற்றவர்கள் உன் மீது வீசும் கற்களை, உனக்கான படிக்கற்கலாக மாற்றிக்கொள்
  • நீ வெற்றிபெற நல்ல நண்பர்களை விட, சிறந்த எதிரிகளே தேவை.
  • மிகவும் நேர்மையாக இருக்காதே, ஏனென்றால் நேரான மரங்களே எப்போதும் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன..
  • எனக்கு துரோகம் இழைக்க நீ எடுக்கும் ஆயுதம் நட்பு என்றால், உன்னை வெல்ல நான் எடுக்கும் ஆயுதம் உண்மையான நட்பு
  • என் விருப்பத்தை உன் விருப்பதிர்க்கேற்ப தீர்மானித்துவிடாதே..
  • உந்தன் கேள்வியில் அதிகாரம் சாயல் இருக்குமானால் நிச்சயமாக என்னுடைய பதிலில் திமிரின் சாடை இருக்கும்.
  • நீ என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நான் கவலைப்பட மாட்டேன் என்னை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் இன்னும் தகுதி பெறவில்லை என்று போய்க் கொண்டே இருப்பேன்.
  • பையன் ஆணவமாக இருந்தால் கம்பீரன் என்று கூப்பிடும் இந்த உலகம் பெண்களை திமிர் பிடித்தவள் என்று கூப்பிடுவார்கள் அப்படி கூப்பிட்டாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம்.
  • நீ எனக்கு மரியாதை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உன் விருப்பம் ஆனால் நீ எனக்கு மரியாதை கொடுக்காமல் நான் உனக்கு கொடுக்க மாட்டேன் என்பதை தெரிந்து கொள்.
  • எனக்கு பின்னாடி பேசுறவன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவனுக்கு முன்னாடி போறது நான்.
  • தனிமையில் இருக்கிறாய் என்பதை நினைத்து தளர்ந்து விடாதே உனது பலம் தனிமைதான்.
  • சிங்கத்துக்கு எப்போதுமே எந்த இடத்திலும் தனி இடம் உண்டு அதுபோல் தான் நானும்.
  • நீ வலிமையாக இருக்க வேண்டுமென்றால் துண்டுகளை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்.
  • உருவத்துக்குத் தான் முக்கியத் துவம் என்றால் யானை தான் காட்டுக்கு ராஜா ஆகியிருக்கும்.
  • கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்கிறான்.
  • ஒரு சிங்கம் ஆடுகளின் கருத்துகளைப் பற்றி பொருட்படுத்துவதே இல்லை.
  • அடுத்தவனை போல் இருக்க ஆசைப் படாதே உனக்கென்று தனித்துவம் உண்டு நாயைப் பார்த்து சிங்கமும் குறைத்தால் அவமானம்தான் மிஞ்சும்.
  • ஆயிரம் பேரைக் கூட எதிர்த்து நில் ஆனால் எப்போதும் ஒருவரைக்கூட எதிர்பார்க்காதே.
  • முடியுமானால் பிறரை விட அறிவாளியாய் இரு ஆனால் அதையும் அவர்களிடம் கூறாதே.
  • கம்பீரம் என்பது உண்மைக்கு உரித்தானது அதை போய் களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதை சிங்கத்திற்கு உரித்தானது அதை நாய்களிடம் எதிர்பார்க்காதே.
  • தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்குத் தெரியவரும்.
  • இவ்வுலகில் அனைவரும் உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.
  • நீ உன்னை நம்பினால் இந்த உலகம் உந்தன் காலடியில்.
  • நீ யாராக இருந்தாலும் உனக்கென ஒரு தன்மானம் திமிரு எப்பொழுதும் வைத்துக்கொள் யாருக்காகவும் எதற்காகவும் அதை எப்போதும் இழக்காதே.
  • தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை. நாய் குறைக்கிறது என்று சிங்கமும் குறைத்தால், சிங்கத்திற்குத்தான் அசிங்கம்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்