சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை

சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு  20 ஆண்டு சிறைத்தண்டனை
X

அரியலூர் நீதிமன்றம் (கோப்பு படம்).

சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமியை கடத்தி திருமணம் செய்த கட்டிடத் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அரியலூர் மாவட்டம் சுண்ட குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் விக்னேஷ் குமார் (வயது 30 ).இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக விக்னேஷ் குமார் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்றார் சிறுமியை ஆரணிக்கு பஸ்ஸில் அழைத்துச் சென்றபோது பஸ்ஸில் வைத்து சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார்.

இதனையடுத்து ஆரணியில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார. இந்த திருமணத்திற்கு விக்னேஷ் குமாரின் தாயார் அம்பிகா உள்பட மூன்று பேர் உதவியுள்ளனர். இதையடுத்து சிறுமி காணாமல் போனது குறித்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஷ் குமார் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா கோட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார்

அந்த தீர்ப்பில் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக விக்னேஷ் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. பத்தாயிரம் அபராதமும் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் மேலும் இதனை ஏகாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

விக்னேஷ் குமாரின் தாயார் அம்பிகா உள்ளிட்ட மூன்று பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 4 லட்சும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை யடுத்து விக்னேஷ் குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!