புழல் அருகே வீட்டில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இளைஞர் கைது

புழல் அருகே வீட்டில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இளைஞர் கைது
X
புழல் அருகே காவாங்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

புழலில் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக புழல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பெயரில் புழல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த ஒரு இளைஞர் இரண்டு இளம் பெண்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காவாங்கரையை சேர்ந்த விக்ரம் ( வயது 22) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இளம் பெண்கள் இருவரையும் அரசு காப்பதில் ஒப்படைத்தனர்.இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர் விக்ரம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story