செங்குன்றம் அருகே இராமானுஜர் உற்சவர் மூர்த்தி பிரதிஷ்டை விழா

செங்குன்றம் அருகே இராமானுஜர் உற்சவர் மூர்த்தி பிரதிஷ்டை விழா
X
இராமானுஜர் உற்சவர் பிரதிஷ்டைக்காக அக்னிகுண்ட யாகம் வளர்க்கப்பட்டது.
செங்குன்றம் அருகே விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் இராமானுஜர் உற்சவர் மூர்த்தி பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீ ஹரிகிருஷ்ணபெருமாள் திருக்கோயில் ஸ்ரீ பகவத் இராமானுஜர் உற்சவர் மூர்த்தி மஹா பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மேட்டுத்தெருவில் வசித்துவரும் முன்னாள் சேர்மன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜி.கே.கணேஷ்கோதண்டன் சாந்தி மற்றும் ஜி.டி.துளசி ராமானுஜம் வேதநாயகி, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இனியன் திவ்யா, செல்வகணபதி கவிதா, ராஜ்குமார் மோனிகா, பாலசந்தர்-காயத்ரி குடும்பத்தினர்கள் உபயமாக ஸ்ரீபகவத் இராமானுஜர் உற்சவர் சிலையை விளாங்காடுபாக்கம் ஊராட்சி மேட்டுத்தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீ ஹரிகிருஷ்ணபெருமாள் ஆலயத்திற்கு ஸ்ரீ பகவத் இராமானுஜர் உற்சவர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சீர்வரிசை மற்றும் கும்ப மரியாதையுடன் மேளதாள வானவேடிக்கைவுடன் வீதிஉலா வந்து ஆலயத்தில் கலசவழிபாடு செய்து தூப தீப ஆராதனை காண்பித்து ஸ்ரீபகவத் இராமானுஜர் பொன்னடி சாற்றப்பட்டது.

பின்னர் பட்டாச்சாரியர்கள் மதுரைகவி ராமானுஜர்தாசர், கோபாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் ஆகியோரால் ஆசார்யரித்விக்வர்ணம், பகவத்பிராத்தனைவேதஆரம்பம், புண்யாஹவாசனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், மஹா சாந்தி ஹோமம், மஹா சாந்தி ஜப்யம், பூர்ணாஹீதி, மேதினீபூஜை, ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், கும்ப ஆவாஹனம், பிம்பவாஸ்து, கோபுஜை, திருமஞ்சனம், சயனாதிவாசம், விஸ்வரூபம், கும்ப திருவாராதனை, அக்னி ப்ரணயம், உக்த ஹோமம், முதல் மூன்று கால பூர்ணாஹுதி, கும்ப புறப்பாடு போன்ற சிறப்பு பூஜைகள் செய்து ஸ்ரீ பகவத் இராமானுஜர் உற்சவ மூர்த்தி மஹா பிரதிஷ்டை நடைபெற்றது.

இதில் தர்மகர்த்தாக்கள் ஜி.கே.கணேஷ்கோதண்டன், எத்திராஜன், கௌரவத்தலைவர் தயாநிதி ராமானுஜர், கிராம தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் கோபிரமணன், செயலாளர் சமயபிரசாத், துணை செயலாளர் முருகன், பொருளாளர் சத்தியசீலன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன், விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்