புழல் சிறையில் கைதிக்கு செல்போன் கொடுத்த வழக்கறிஞர் கைது!

புழல் சிறையில் கைதிக்கு செல்போன் கொடுத்த வழக்கறிஞர் கைது!
X
பெண் வழக்கறிஞர் கைது ( மாதிரி படம்)
புழல் சிறையில் நேர்காணலின் போது கைதிக்கு வீடியோ கால் செய்ய போன் கொடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் நேர்காணலின் போது கைதிக்கு வீடியோ கால் பேச செல்போன் கொடுத்த பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த் என்கிற கல்லறை ஜான் என்ற கைதியை பார்ப்பதற்காக கே.கே.நகரை சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி ( வயது 26) நேற்று வந்திருந்தார். அப்போது திடீரென கைதியிடம் தமது செல்போனில் வீடியோ கால் பேச கொடுத்துள்ளார். இதனை கண்ட சிறை காவலர்கள் செல்போனை பறிமுதல் செய்தனர். சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போனை மறைத்து கொண்டு சென்று கைதிக்கு உதவியது குறித்து சிறை அதிகாரிகள் புழல் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரை பதிவு செய்த போலீசார் பெண் வழக்கறிஞர் கைது செய்து. பின்னர் அவர் காவல் நிலைய சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே சிறைக்குள் காவலர்களிடம் தகராறு செய்ததாக பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!