மழை நீர் வீடுகளை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

மழை நீர் வீடுகளை  சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
X

மழைநீரில் நடந்து வரும் மக்கள்.

மழை தண்ணீர் வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாடியநல்லூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ள மக்கள். அதிகாரிகளோ உள்ளாட்சி பிரதிநிதிகளோ யாரும் வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை என புகார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மகாமேரு நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று சோழவரத்தில் 30 சென்டிமீட்டர், செங்குன்றத்தில் 28 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. நேற்று பரவலாக பெய்த கனமழை காரணமாக மகாருநகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் முற்றிலுமாக சூழ்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள மகாமேருநகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். பால், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட இடுப்பளவு தண்ணீரிலும், முழங்கால் தண்ணீரில் தத்தளித்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே இந்த தண்ணீரில் கடந்து செல்லும் சூழல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

மேலும் சிலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த பொருட்கள் நனைந்து பாழாகி விட்டதால் மாடியில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் மழைக் காலங்களில் தேங்கும் மழை நீர் 10 முதல் 15 நாட்கள் வரை வடியாமல் தேங்கி நிற்பதால் வாழ்வாதாரம் பாதித்து வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழைநீர் தேங்கி நிற்கக் கூடிய சூழலில் அரசு அதிகாரிகளோ, உள்ளாட்சி பிரதிநிதிகளோ யாருமே வந்து இந்தப் பகுதியை பார்வையிடவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் என பலர் இருக்கக்கூடிய சூழலில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழல் இருப்பதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத சூழல் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். மழைநீர் வடிந்து செல்ல முறையான வடிகால் வசதிகள் செய்யப்படவில்லை என இப்பகுதி மக்கள் சாட்டுகின்றனர். தமிழ்நாடு அரசு விரைந்து தேங்கி நிற்கும் மழை நீர் வெளியேறும் வகையில் வடிகால் தூர்வாரி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் என பலர் இருக்கக்கூடிய சூழலில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழல் இருப்பதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாத சூழல் இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர். மழைநீர் வடிந்து செல்ல முறையான வடிகால் வசதிகள் செய்யப்படவில்லை என இப்பகுதி மக்கள் சாட்டினர். தமிழ்நாடு அரசு விரைந்து தேங்கி நிற்கும் மழை நீர் வெளியேறும் வகையில் வடிகால் தூர்வாரி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்