காதலியை கழித்து நிறுத்திக் கொன்ற காதலன் கைது
குரோம்பேட்டையில் காதலியை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்த காதலனை போலீஸார் கைது செய்தனர்
உல்லாசமாக இருக்க அறை எடுத்து தங்கிய போது காதலனுக்கு ஏற்கெனவே அதிக பெண்களுடன் பழக்கம் இருப்பதை தட்டி கேட்டதால் நிகழ்ந்த கொலை.15 வயதில் தொடங்கிய காதல் 20 வயதில் கொலை முடிந்த கொடூரம்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிஷ்(20).பவுசியா (20).இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா சென்னை குரோம்பேட்டை நீயூ காலணியில் உள்ள இமை மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பாலாஜி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் பவுசியா திடீரென மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்வில்லை கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து வந்த காதலன் ஆசிக் காதலி பவுசியா படிக்கும் விடுதிக்கு சென்று சந்தித்து பேசிவந்த நிலையி,ல் நேற்று காலை 11.மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள நீயூ குரோம் ரெசிடென்ஸியில் 2.வது மாடியில் 201வது அறையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் காதலன் தனக்கும் காதலி பவுசிகாக்கும் தகராறு ஏற்பட்டதாகவும்,இதனால் காதலி பவுசியாவை தான் அணிந்து இருந்த டி- சர்ட் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இதனைப் பார்த்த பவுசியா உடன் படிக்கும் மாணவிகள் இது சம்பந்தமாக குரோம்பேட்டை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பப் படத்திற்கு விரைந்து விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மாணவி பவுசியா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
அதனை தொடர்ந்து பவுசியா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தார். மாணவியை கழித்து நெரித்து கொன்று அங்கிருந்து தப்பி ஓடிய காதலன் ஆசிக்கை பல்லாவரம் அருகில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் காதலர்கள் இருவரும் கேரளாவில் இருந்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் ஒரு குழந்தை பிறந்துள்ளது இதை அறிந்த கேரளா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போஸ்கோ சட்டத்தில் ஏற்கெனவே சிறை சென்றுள்ளான் காதலன் ஆஷிக். .இருவருக்கும் பிறந்த குழந்தை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் சென்னையில் இருந்த தனது காதலியை பார்க்க வந்த பொழுது இந்த கொலை சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது காதலியை பார்க்க வந்து அரை எடுத்து உல்லாசமாக இருக்க தங்கிய பொழுது காதலனுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. மேலும் இது குறித்து தொடர்ந்து குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu