சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி..!

சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி..!
X

படம்

செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு கச்சைகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்குன்றம் அருகே சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் பம்மதுகுளம் ஊராட்சி லட்சுமிபுரம் தபால் நிலையம் அருகே சக்தி பிரகாஷ் தற்காப்பு சிலம்பக் கலைக்கூடம் சார்பில் சிலம்பம் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட சிலம்ப பேரவை துணைத்தலைவரும் சக்தி பிரகாஷ் தற்காப்பு சிலம்பக் கலைகூடத்தின் நிறுவனர் தலைமை பேராசான் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.


செயலாளர் மாஸ்டர் சத்தியநாராயணன் அனைவரையும் வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட சிலம்ப பேரவை தலைவர் நந்தகுமார், சட்ட ஆலோசகர்கள் விஜயகுமார், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிலம்பம் பயின்ற மாணவ-மாணவிகள் தங்களது தனிதிறமைகளை வெளிப்படுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வரிமுனுசாமி, செங்குன்றம் எம்-4காவல் நிலைய சட்டஒழுங்கு காவல் ஆய்வாளர் புருசோத்தமன், சிலம்ப ஆசான் முருககனி, சிலம்ப மாஸ்டர் கோதண்டன் ஆகியோர் கலந்துகொண்டு சிலம்பம் பயின்ற சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கச்சை கட்டை கட்டிவிட்டு தகுதி சான்றிதழ்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினர்.

இதில் யோகா மாஸ்டர் பார்த்திபன், துணை பொருலாளர் ரேகா, மாஸ்டர் ஷாலினி உள்ளிட்ட சக சிலம்ப மாஸ்டர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சினை கலைசெல்வன்-பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் பொருளாளர் மாஸ்டர் தட்ஷிணாமூர்த்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்