பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை

பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை
X
பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது கஞ்சம்பட்டி அம்மே கவுண்டனூர் பகுதி. அக்கிராமத்தில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவில் வீதியில் கார்த்திக் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நைநிதா என்ற மூன்று வயது பெண் குழந்தை உண்டு.

இந்த நிலையில் வீட்டின் முன்புறம் உள்ள வராண்டாவில் இன்று காலை 10 மணி அளவில் நைநிதா விளையாட்டு கொண்டிருந்தாள். அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை விழுந்துள்ளது‌. இதில் நீரில் மூழ்கிய நைனிதா பரிதாபமாக பலியானது. குழந்தை காணவில்லை என பெற்றோர் தேடி வந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்த குழந்தை உடலைக் கண்டு பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் தொட்டியில் இருந்த குழந்தையின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜதுரை தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்