வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் உட்பட மூன்று படங்கள் நடிக்கிறேன் : நடிகர் கவின்

வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் உட்பட மூன்று படங்கள் நடிக்கிறேன் : நடிகர் கவின்
X

நடிகர் கவின் 

பிளடி பெக்கர் கமர்சியலான படம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து உள்ளோம்.

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிராட்வே சினிமாஸில் நடிகர் கவின் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 7 மணிக்கு திரையிடப்பட்டது.

இதனைப் பார்க்க அந்த திரைப்படக் குழுவினர் வருகை தந்தனர். முன்னதாக ரசிகர்களுடன் சிறிது நேரம் படம் பார்த்து விட்டு வந்தனர். ரசிகர்கள் கவின் உடன் மற்றும் கிங்ஸ்லி உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் ரசிகர்களுடன் படம் பார்த்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் கவின் இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேசிய கவின், படத்தைப் பார்த்த ரசிகர்கள் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அதை பார்ப்பதற்கு எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. தீபாவளிக்கு முதல் முறையாக படம் வெளியாகி உள்ளது. பிளடி பெக்கர் கமர்சியலான படம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து உள்ளோம் என தெரிவித்தார். தீபாவளிக்கு வந்த திரைப்படங்கள் நான்கும் வெவ்வேறு விதமான கதைகளும் கொண்டுள்ளது.

நம்ம படமும் வேறு கதைகளும் என்பவர் அனைவரும் பார்க்கக் கூடியதாக இருக்கும் என கவின் தெரிவித்தார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கின்ற ஒரு படமும், நடிகை நயன்தாராவுடன் ஒரு படமும், சதீஷ் மாஸ்டர் உடன் ஒரு படமும் என மூன்று படங்கள் நடிக்கிறேன் என தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்