கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி
X

போடி காமன்வாடியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பங்கேற்றார்.

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போடி காமன்வாடியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பங்கேற்றார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் போடி காமன்வாடி ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு தூய்மை பாரத இயக்கம் சார்பில் 10 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சதீஷ் பாபு, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஐ. நாகராஜன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பெ. தட்சணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் நாகலட்சுமி, சசிகுமார் துணைத்தலைவர் விஜய் பழனி மற்றும் வார்டு கவுன் சிலர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!