நத்தத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நத்தத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

நத்தத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்கம் ஆர்ப்பாட்டம்.

நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் தீனதயாளன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு , நத்தம் கிளை வட்டாரத் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். செயலாளர் உக்கிரபாண்டி, இணை செயலாளர் ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் மகுடபதி கலந்து கொண்டு பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த வடிவேலு என்பவர், ஒன்றிய குழு தலைவராக பதவி வகிக்கிறார். பா.ம.க., வைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர், துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஆறு மாதங்களாக, குடிநீர், சிமென்ட் சாலை அமைத்தல், பள்ளி கட்டடங்கள் பழுது பார்த்தல் ஆகிய பல்வேறு பணிகளுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் டெண்டர் விடாமல் காலம் தாழ்த்தி வருகிறார் எனக் கூறி அதனை கண்டித்து, தீனதயாளன் மற்றும் சில கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் தீனதயாளன் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன், புறம்பான பணிகளை மேற்கொள்ள தொழில் நுட்ப அனுமதி பெற்றுத்தரச் சொல்லும் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி பேசினார்.

தொடர்ந்து, அவருக்கெதிராக கோஷம் எழுப்பினர். இதில் இச்சங்கத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!