கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!
ஈரோடு : கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர் புதூர் பகுதியில் பாறைகளை தகர்க்கும் வெடிபொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக கடம்பூர் விஏஒ விஜய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அந்தப் பகுதியில் கடம்பூர் போலீசார் சோதனை நடத்தினர்.
குப்புசாமியின் தோட்டத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
அப்போது அத்தியூர் புதூரில் உள்ள குப்புசாமி என்பவரது (60) தோட்டத்து மாட்டுக்கொட்டகை அருகே வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு மறைத்து வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் 28, டெட்டனேட்டுகள் 28 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஐந்து பேர் கைது
வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பது சம்பந்தமாக கடம்பூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (30), வாணிப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ராசுகுட்டி (28), கடம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (38), கவுந்தபாடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (38) உள்ளிட்ட 5 பேரை கடம்பூர் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கடம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிபொருட்களை எங்கிருந்து பெற்றனர், யாருக்காக கொண்டு வந்தனர், அவற்றை என்ன செய்ய உத்தேசித்திருந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu