பவானி அருகே ஓடையில் சிவப்பு நிறத்தில் ஓடிய சாயக்கழிவு நீர்..!

பவானி அருகே ஓடையில் சிவப்பு நிறத்தில் ஓடிய சாயக்கழிவு நீர்..!

ஓடையில் சிவப்பு நிறத்தில் ஓடிய சாயக்கழிவு நீரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேர்வராயன்பாளையத்தில் ஓடையில் சிவப்பு நிறத்தில் ஓடிய சாயக்கழிவு நீரால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பவானி அருகே சேர்வராயன்பாளையத்தில் ஓடையில் சிவப்பு நிறத்தில் ஓடிய சாயக்கழிவு நீரால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த செங்காடு, சேர்வராயன்பாளையம், காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால் இங்கு, சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. மேலும், சட்டவிரோதமாக சாயக்கழிவுகளை பொது வெளியில் வெளியேற்றிய அனுமதியற்ற சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன.

இந்த நிலையில் சேர்வராயன்பாளையம், மாரியம்மன் கோயில் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் சிவப்பு நிறத்தில் சாயக்கழிவு நீர் பட்டப்பகலில் ஓடியதால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை ரகசியமாக சாயப்பட்டறைகள் திறந்துவிட்டு வந்த நிலையில், தற்போது பட்டப்பகலில் துணிகரமாக சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுவது அதிகரித்துள்ளது.


துகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த ஓடையில் சாயப்பட்டறைகள் திறந்துவிடும் சாயக்கழிவு நீர் நேரடியாக சென்று பவானி ஆற்றில் ஓடும் தண்ணீரில் கலந்து வருகிறது. சாயக்கழிவுகள் கலந்த பவானி ஆற்று நீர், காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. சாயக்கழிவு நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று, வேளாண் நிலங்கள் ரசாயனக் கலப்பால் மாசடைந்து வருகிறது.

ஏற்கனவே, பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளிலிருந்து குடியிருப்பு பகுதிகளின் கழிவுகள் நேரடியாக கலந்து மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், சாயக்கழிவு நீரும் கலப்பது பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே, சாயப்பட்டறைகள் அதிகம் உள்ள காடையம்பட்டி, செங்காடு மற்றும் சேர்வராயன்பாளையம் பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி சாயக்கழிவுகள் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story