உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: டிச.24ல் பெருந்துறை வட்டத்தில் ஈரோடு ஆட்சியா் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: டிச.24ல் பெருந்துறை வட்டத்தில் ஈரோடு ஆட்சியா் கள ஆய்வு
X

பெருந்துறை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வரும் டிசம்பர் 24ம் தேதி பெருந்துறை வட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறாா்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வரும் டிசம்பர் 24ம் தேதி பெருந்துறை வட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறாா்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் டிசம்பர் 24ம் தேதி அன்று காலை 9 மணிமுதல் மறுநாள் 25ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப் படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளார். மேலும், 24ம் தேதி மாலை 4.30 மணிமுதல் 6 மணி வரை பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!