முயல் ரத்தத்தில் 'ஹேர் ஆயில்' தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு..!

முயல் ரத்தத்தில் ஹேர் ஆயில் தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு..!
X
முயல் ரத்தத்தில் 'ஹேர் ஆயில்' தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டையில், கருடா ஹேர் ஆயில் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு முயல் ரத்தத்தில் ஆயில் தயாரிப்பதாக, நிறுவனத்தை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் 32, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பலர், மருந்து வாங்கி செல்வதாக தெரிகிறது.

மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு

புகாரின் அடிப்படையில் ஈரோடு மாவட்ட உதவி இயக்குனர் ராம் பிரபு அறிவுரைப்படி, மருந்து ஆய்வாளர்கள் வெங்கடேஷ், அமுதா ஆகியோர், சிங்கம்பேட்டைக்கு நேற்று வந்து, மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது.

பறிமுதல் நடவடிக்கை

இதையடுத்து ஹேர் ஆயில் பாட்டில்கள், மூலப்பொருள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். ஆய்வு கூடத்துக்கு ஹேர் ஆயில் அனுப்பி வைக்கப்படும். சோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருந்து ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

Tags

Next Story
பள்ளிப்பாளையம்: சாலை பணியை விரைவாக முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் உமா உத்தரவு