/* */

பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிக்கப் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
X
Erode news- விபத்தில் உயிரிழந்த வெங்கடேசன். (கோப்பு படம்)

Erode news, Erode news today- பவானி அருகே பிக்கப் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முகாசிப்புதூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி என்கிற வெங்கடேசன் (வயது 57). இவர், இன்று காலை அம்மாபேட்டை - அந்தியூர் சாலையில் பூதப்பாடி சேர்மன் தோட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பிக்கப் வேன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில், அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, புகாரின் பேரில் பிக்கப் வேன் ஓட்டுநர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 May 2024 9:00 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  மரபணுவில் உள்ள பண்டைய வைரஸ் டிஎன்ஏ மன ஆரோக்கியத்தை எவ்வாறு...
 2. தொழில்நுட்பம்
  மீண்டும் திரும்பும் பூமியில் சூரியப் புயலைத் தூண்டிய மான்ஸ்டர் சன்...
 3. வழிகாட்டி
  காவல் நிலைய வழக்குகளின் அடிப்படை சந்தேகங்கள்..! சட்டம் அறிவோம்...
 4. உலகம்
  இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 37 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு..! சர்வதேச...
 5. உலகம்
  காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 26 நாட்கள் அதிகரித்த வெப்பம் :...
 6. உலகம்
  அண்டார்டிகாவில் டெல்லியை விட நான்கு மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது
 7. வானிலை
  வடக்கு, மத்திய இந்தியாவில் வெப்பம் 50 டிகிரியை தாண்டியது
 8. உலகம்
  சொத்தில் பாதிக்கும் மேல் நன்கொடையாக வழங்கும் ஓபன்ஏஐ CEO சாம்
 9. உலகம்
  மோடி தோற்க வேண்டும் : பாக் முன்னாள் அமைச்சர் பேச்சு..!
 10. உலகம்
  பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைதி ஒப்பந்தத்தை மீறியதாக...