/* */

ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தால் ஈரோடு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
X

வாட்டி வதைக்கும் வெயில்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தால் ஈரோடு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணை, ஏரி, குளம், குட்டை, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நீரின்றி வறண்டுள்ளன.

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 110 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் 110.48 டிகிரியாக பதிவான வெயில், நேற்று உச்ச அளவாக 111.2 டிகிரி பதிவானது. இந்நிலையில், இன்று 110.48 டிகிரி வெயில் பதிவானது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

மேலும், பகல் முழுவதும் தான் வெயில் வாட்டி வதைக்கிறது என்றாலும் இரவிலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை தொடர்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடுமையாக வாட்டி வதைத்து வருவதால் வெப்ப அலையில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகத்தை தணிக்க முடியாமல் மக்கள் திணறலுக்கு உள்ளாகி உள்ளனர். நாளை (சனிக்கிழமை) அக்னி தொடங்குகிறது. அதற்கு முன்பே வெயிலின் கொடுமை பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்னி வெயிலின்போது வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்குமோ என்ற பீதியில் உள்ளனர்.

Updated On: 3 May 2024 1:30 PM GMT

Related News