ஈரோட்டில் டிரைவருக்கு திடீர் வலிப்பு: டீக்கடைக்குள் புகுந்த அரசு பேருந்து

ஈரோட்டில் டிரைவருக்கு திடீர் வலிப்பு: டீக்கடைக்குள் புகுந்த அரசு பேருந்து
X

ஈரோடு சூரம்பட்டி எஸ்கேசி ரோடு கிராமடைப் பகுதியில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி டீக்கடைக்குள் புகுந்து நிற்பதை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் அரசு பேருந்து டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் டீக்கடைக்குள் புகுந்து மோதி நின்ற பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டில் அரசு பேருந்து டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் டீக்கடைக்குள் புகுந்து மோதி நின்ற பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு சூரம்பட்டியில் இருந்து அரசு பேருந்து ஈரோடு பேருந்து நிலையம் நோக்கி சென்றது. இந்த பேருந்தை காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த டிரைவர் அண்ணாதுரை (வயது 57) என்பவர் ஓட்டினார். சூரம்பட்டி எஸ்கேசி ரோடு கிராமடைப் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, டிரைவர் அண்ணாதுரைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு மின்கம்பத்தில் மோதிய படி டீக்கடைக்குள் புகுந்து நின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். உடனே டிரைவர் அண்ணாதுரை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டியில் உள்ள தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story