குடிபோதையில் தந்தையை பீர் பாட்டிலால் குத்திய மகன் கைது

குடிபோதையில் தந்தையை பீர் பாட்டிலால் குத்திய மகன் கைது
X

கைது செய்யப்பட்ட அசோக்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே குடிபோதையில் பீர் பாட்டிலால் தந்தையை குத்திய மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). இவரது மூத்த மகன் அசோக் (வயது 29). இந்த நிலையில், குடிபோதையில் வீட்டில் இருந்த அசோக்கிடம் ஈஸ்வரன், தாயாருடன் ஏன் அடிக்கடி சண்டையிடுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு, அசோக் அப்படி தான் போடுவேன் என்று கூறி, ஈஸ்வரனிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில், தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அசோக், தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து ஈஸ்வரனின் இடதுபக்க வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரனை அவரது தம்பி அம்மாசை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஈஸ்வரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரில் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!