தாளவாடி மலைவாழ் மக்களை குடிபெயர்வு செய்யக் கூடாது: விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

தாளவாடி மலைவாழ் மக்களை குடிபெயர்வு செய்யக் கூடாது: விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
X

தாளவாடி அருகே உள்ள பீரேஸ்வரர் கோயிலில் நடந்த அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களை எக்காரணம் கொண்டும் குடிபெயர்வு செய்யக் கூடாது என்று தாளவாடியில் நடந்த அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் முடிவு செய்யப்பட்டது.

தாளவாடி வட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களை எக்காரணம் கொண்டும் குடிபெயர்வு செய்யக் கூடாது என்று தாளவாடியில் நடந்த அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் முடிவு செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். சோளகர்கள், ஊராளிகள், லிங்காயத்துகள் உள்ளிட்டஇன மக்கள் அதிக அளவில் இங்கு உள்ளனர்

ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி மலைக்கிராமங்கள் ஒன்றிணைந்த தாலுகா பகுதி தாளவாடி. இங்கு பையண்ணபுரம், கேர்மாளம், ஆசனூர், இக்கலூர், மல்லாங்குழி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, தாளவாடி, திங்களூர் என்று 10 கிராம ஊராட்சிகள் உள்ளன.

ஒவ்வொரு ஊராட்சியிலும் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு குக்கிராமமும் ஏதேனும் ஒரு மலைக்குன்றின் மறைவில் உலகத்துக்கு மறைவாகவே பல ஆண்டுகள் இருந்துள்ளன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள பீரேஸ்வரர் கோயிலில் அனைத்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் குமார ரவிக்குமார், மகேந்திர குமார் ஆகியோர் தலைமையில் நேற்று (19ம் தேதி) நடைபெற்றது.

கூட்டத்தில் தாளவாடி வட்டத்தில் உள்ள வனப்பகுதி எல்லையில் ரயில்வே தண்டவாளத்தில் போர்கால அடிப்படையில் வேலி அமைக்க வேண்டும். தாளவாடி வட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

வனப்பகுதிக்குள் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்துவதற்கு வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. மனித விலங்கு மோதலின் போது ஏற்படும் உயிர் இழப்பிற்கு கர்நாடகத்தில் வழங்கப்படுவது போல இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

தாளவாடி வட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களை எக்காரணம் கொண்டும் குடிபெயர்வு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story
மிஸ் பண்ண அமெரிக்கா..! டாப்ல இந்தியா.. நோபல் பரிசாளர் ‘பளிச்’