அந்தியூர் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திருப்பூர் எம்பி

அந்தியூர் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திருப்பூர் எம்பி
X

அத்தாணியில் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலத்துடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திருப்பூர் எம்பி சுப்பராயன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துடன் சென்று, வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

Erode Today News, Erode Live Updates, Erode News- அந்தியூர் பகுதியில் திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துடன் சென்று, வாக்காளா்களுக்கு இன்று (26ம் தேதி) நன்றி தெரிவித்தாா்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் அந்தியூர் ஒன்றிய பகுதி வாக்காளர்களுக்கு இன்று (26ம் தேதி) சனிக்கிழமை நன்றி தெரிவித்தார்.


அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தியூர், அத்தாணி பேரூராட்சி பகுதி, குப்பாண்டம்பாளையம், நகலூர், சின்னத்தம்பிபாளையம், மைக்கேல் பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், பச்சாம்பாளையம், பிரம்மதேசம், வேம்பத்தி, கூத்தம்பூண்டி, கீழ்வாணி, மூங்கில்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திறந்த வாகனத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய திமுக நிர்வாகிகள், பேரூர் திமுக நிர்வாகிகள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட திமுக தலைமையிலான கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story